வேலூர் மாவட்டம், வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெரு ஜோசப் நகரில் இருந்து 30ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெரு ஜோசப் நகரில் இருந்து 30 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சியினை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் திருவீதி உலாவும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ஜி. திருப்பதி குருசாமி, சுரேஷ்குமார், கே.கோவிந்தராஜ், எம்.கே.பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் அன்பு நிதி, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பாதயாத்திரை பக்த சபையினர்கள் மற்றும் விழா குழுவினர்கள், பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment