வேலம்மாள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை விதைத்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 September 2023

வேலம்மாள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை விதைத்த மாவட்ட ஆட்சியர்.

வேலம்மாள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து 1 லட்சம் விதை பந்துகளை விதைத்த  மாவட்ட ஆட்சியர். கடந்த 15 நாட்களாக வேலம்மாள் பள்ளி மாணவர்களோடு இணைந்து தயாரித்து வந்த 1 லட்சம் விதைபந்துகள் வேலூர் மாவட்டம் முழுவதும் தூவும் பணியை தீர்த்தகிரி மலையில்  வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்தார். 


மாவட்டம் முழுவதும் பள்ளிகொண்டா, குடியாத்தம், பேரணாம்பட்டு, பாலமதி, ஓட்டேரி, சத்துவாச்சாரி, செங்காநத்தம் மலைபகுதிகளில் தூவ வேலூரில் இருக்கும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து அவர்கள் குழுவிற்கு இலவசமாக விதைபந்துகள் வழங்கப்பட்டது. மாவாட்டத்திலே முதல்முறையாக Drone பயன்படுத்தபட்டு விதைபந்துகள் மலையில் செல்ல முடியாத இடத்திற்கும் விதைகள் வீசப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்  அமுதா ஞானசேகரன் அவர்கள், வெங்கடாபுரம் ஊராட்சி தலைவர் பாபு அவர்கள்,  தாசில்தார் அவர்கள், வேலம்மாள் பள்ளி தாளாளர் ரதிகுமாரி அவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வேலூரில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். Drone பயன்படுத்த உதவி புரிந்த  கமல் மற்றும்  சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்தார். 



- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad