டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 September 2023

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல்பாண்டியன் அவர்களின் உத்தரவு பேரில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வாசுகி கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.


இதில் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை தையல் இந்திரம் ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முடநீக்கவியல் வல்லுநர் சுதாகர் பேச்சு பயிற்சியாளர் பிரபாகர் அரசு மருத்துவர்கள் எலும்பு முறிவு மருத்துவர் மஞ்சுநாதன் காது மூக்கு தொண்டை மருத்துவ டாக்டர் சதீஷ் மனநல மருத்துவர் சிவாஜி ராவ் குழந்தைகள் மருத்துவர் மாறன் பாபு சக்தி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் குடியாத்தம் கேவிகுப்பம் பேரணாம்பட்டு போன்ற பகுதியில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர் இதில் தகுதி வாய்ந்த 210 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும்10 மாற்றித் திறனாளிகளுக்கு தையல் எந்திரம் மூன்று மாற்று திறனாளிகள் ஊன்றுகோள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad