வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பழனி தலைமையில் இன்று (22.9.23) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் போஸ்பேட்டை அன்னபூரணி மண்டபத்தில் 19,20,21,22,23,24 ஆகிய வார்டுகளுக்கு நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு காமாட்சி அம்மன் பேட்டை செங்குந்தர் மண்டபம் அருகில் படவேடு அம்மன் மண்டபத்தில் 30,31,32,33,34 வார்டுகளுக்கு நடைபெற்றது. நகர செயலாளர் பழனி பூத் கமிட்டி குறித்து ஆலோசனைகளையும் விண்ணப்ப படிவங்களையும் வார்டு கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
மேலும் மாயா பாஸ்கர் K.அமுதா கருணா, S.N. சுந்தரேசன், நகர மன்ற துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, ரேவதி மோகன், தென்றல் குட்டி, லாவண்யா குமரன். சுரேஷ்குமார் ஆகியோர் கழக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி குறித்து ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், சார்பணி செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment