மாநகராட்சியின் அலட்சியத்தால் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 November 2023

மாநகராட்சியின் அலட்சியத்தால் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை!

வேலூர் மாவட்டம், காட்பாடி மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தினந்தோறும் ஓட்ட பிள்ளையார் கோவில் இருந்து காந்திநகர் ரவுண்டணா வழியாக காலேஜுக்கு செல்லும் மாணவர்கள் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக குண்டும் குழியுமாக இருந்துள்ள சாலையில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் நடந்து பள்ளிக்கும் காலேஜிக்கும் செல்ல முடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனை, மாநகராட்சி கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பொதுமக்கள் கூறும் போது இதுபோன்ற மழைக்காலங்களில் மாநகராட்சியில் பணியாற்றும் உரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு முழுமையான காரணம். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி கண்டும் காணாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதின் மர்மம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் இதனை உடனே சரி செய்வார்களா? இல்லை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பர்களா?  கேள்வி எழுப்பினர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad