வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் மற்றும் பேர்ணாம்பட்டு உள் வட்டம் மதுரா கொண்டம்பள்ளி கிராமத்தில் சத்தியா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இரண்டு தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத சுமார் (45 வயது )மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது.
இறப்பதற்கு முன்பாக கிணற்றின் கரையோரத்தில் கட்டம் போட்ட வெள்ளை நிறம் லுங்கி கருப்பு கலர் செப்பல் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
இறந்த நபரின் பெயர் பிரகாசம் த / பெ புருஷோத்தமன் என்றும் இவர் முக்குன்றம், p வெங்கடாபுரம் அஞ்சல் குடியாத்தம் வட்டம் என்ற தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையின் மூலம் பிரேதத்தை வெளியே எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment