குடியாத்தம் ஜூன் 03
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மாத கோடைக்
கால பயிற்சி முகாம்
24.06.2024 முதல் 31.05.2024 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் குடியேற்றம் புவனேசுவரி பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி இந்நிகழ்விற்கு தலைமையேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் ஆசிரியர் பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் க.சையத் அலீம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் அவர்கள் ஆற்றிய துவக்கவுரையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவதை விட அவர்களுக்கு
ஒழுக்கமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று பேசினார்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி. இ.சிவகுமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடியேற்றம்
நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஆட்டோ மோகன், சதுரங்கப் பயிற்சியாளர் பி. கார்த்திகேயன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர், பெரியார் மணியம்மை நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்கள் சதுரங்கப் பயிற்சி பெற்ற 75 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ், சதுரங்க உபகரணங்கள் , மற்றும் நினைவு பரிசு வழங்கி அவர் ஆற்றிய விழா சிறப்புரையில் பேசிதாவது , வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கடந்த ஓராண்டுகளாக புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம், கண் சிகிச்சை மருத்துவ முகாம், கல்லூரி மாணவர்களுக்கு மனநல மருத்துவம் , போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி ஆகியவைகள் நடத்தியுள்ளார்கள். சமூகத்திற்கு பயன்படும் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திட வேண்டுமென்று அவர்களை வாழ்த்துகிறேன். பள்ளி மாணவர்கள் கோடைக்கால விடுமுறையை வீணாக்காமலும் , செல்போன் கேளிக்கையில் மூழ்கி விடாமல் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்த சதுரங்க பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொண்டதை மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார். விழாவின் முடிவில் குடியேற்றம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி. சாந்தகுமார் நன்றியுரை ஆற்றினார். வேலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் உ.விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் வேலூர் மாவட்ட காப்பாளர்கள் ச.கலைமணி, ச. ஈஸ்வரி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ச.இரம்யா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா நகர அமைப்பாளர் வி.மோகன்,க.பரசிவம், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன், ப.ஜீவானந்தம் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment