குடியாத்தம் கௌதம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 June 2024

குடியாத்தம் கௌதம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் ஜூன் 14

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம் பேட்டை பகுதி அமைந்துள்ள ஸ்ரீ  கெங்கையம்மன் தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்  7- வது வாா்டு நகர மன்ற உறுப்பினர் கற்பகம் மூர்த்தி 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மேகநாதன் மற்றும் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

தேர் அப்பகுதியில் உள்ள வீதிகளில் ஊர்வலமாக வந்தது பக்தர்கள் தேர் மீது பூ மிளகு உப்பு போன்றவை செலுத்தி நேர்த்திக்கடனை செய்தார்கள்‌ இந்நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாமை டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார்.

ஏ வி செல்வம் கற்பகம் மூர்த்தி முன்னிலை வகித்தனர் கௌரவ தலைவர் ஆர் மூர்த்தி ஊர் தலைவர் மேகநாதன் ஊர் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் பாரதிதாசன்
தேமுதிக மாவட்ட கழக துணை செயலாளர் ரமணி மற்றும் கௌதம் பேட்டை காந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad