குடியாத்தம் ஜூன் 03
குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர் மகள் காஞ்சனா (வயது17) குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது பெற்றோர்கள் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது இதில் மனம் வருந்திய காஞ்சனா அவரது வீட்டில் படுக்கை அறைக்குச் சென்று அவரது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டனர் மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இறந்த காஞ்சனாவின் உறவினர்கள் அப்பகுதி மக்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கூச்சலிட்டு அழுததால் பரபரப்பாக காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment