தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்பு பழக்கம் , குழு விளையாட்டுகளுடன் இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் விழா நிறைவு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 4 June 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாசிப்பு பழக்கம் , குழு விளையாட்டுகளுடன் இரண்டு நாள் குழந்தைகள் அறிவியல் விழா நிறைவு.

வேலூர் மாவட்டம் ஜூன் 04

வேலூர் மாவட்டம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலூர் குழந்தைகள் அறிவியல் விழாவில் பங்கேற்ற அனைவருமே வெற்றியை கொண்டாடினார்கள்.  காகித மடிப்பு கலையினையும் பேச்சாற்றல் திறனையும் வளர்த்துக்கொண்டனர்.  
வேலூர் அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் கல்வி விழா இரண்டு நாட்கள் வேலூர் ஊரிசு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

குழந்தைகள் அறிவியல் கல்வி விழாவின் நிறைவு விழா வேலூர் அறிவியல் இயக்க தலைவர் முனைவர் கே.தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட  மாவட்ட செயலர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், செயற்குழு நிர்வாகிகள் ஜோசப் அன்னையா, பி.ராஜேந்திரன், ச.குமரன், பி.ராமு, கே.இளவழகன், ராணிப்பேட்டை அறிவியல் இயக்க மாவட்ட செயலர் பழனிவேல் ஆகியோர் அறிவியல் விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்து பாராட்டுச் சான்று வழங்கி சிறப்பித்தார்கள்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் பேசும் போது கூறியதாவது.  இந்த பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்தது. இரண்டு நாட்கள் எவ்வாறு சென்றது என்றே எங்களுக்கு தெரியவில்லை.  பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.  நாங்கள் இதற்கு முன் மேடையேறி பேசியதில்லை தற்போது மேடையேறவேண்டும் நாமும் பேச வேண்டும் என்ற ஆர்வம் இந்த நிகழ்வின் மூலம் எங்களுக்கு கிடைத்தது என்றனர்.
இரண்டாம் நாள் முற்பகல் நிகழ்வுகளாக
அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன் அவர்கள் வளரிளம் குழந்தைகளின் உடல் நலமும் மனநலமும் என்ற தலைப்பிலும், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலும் ஆராய்ச்சியாளர்/எழுத்தாளர் ஆற்றல் பிரவீன்குமார் அவர்கள் மேற்கு மலைத்தொடர்ச்சியும் இயற்கைவளங்கள் பாதுகாப்பும் என்ற தலைப்பிலும்,  அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்ச்செல்வன் அவர்களும்  மாணவர்கள், பெற்றோர்கள் ஒருங்கிணைந்த பயிலரங்குகள் நடைபெற்றன. 00
0மாண0வர்களின் பெற்றோர்கள் பேசும் போது இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற எங்களது குழந்தைகள் வீட்டிற்கு வந்த பிறகும் சிந்தனை செய்தனர்.  சித்திரம் வரைவது, காகிதங்களை மடிப்பது, மேலும் அறிவியல் சோதனைகள் செய்வது என குழந்தைகள் ஏதோ செய்வதிலேயே முனைப்பாக சோர்வின்றி காணப்பட்டனர் என்றனர்.
 இரண்டு நாட்களும் கணிதம், அறிவியல், ஒரிகாமி, ஓவியம், கற்பனையும் கைத்திறனும், வளர்இளம் குழந்தைகளின் உடல் நலமும் மனநலமும், இயற்கையோடு இணைந்து வாழ்வோம், கதையும் பாடலும், எழுத்தாற்றல், வாசிப்பு பழக்கம் , குழு விளையாட்டுகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி, செய0ல்பாடுகள், பயிலரங்குகளை சிறப்பாக நடத்திய மாநில, மாவட்ட கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் முனைவர் பே.அமுதா, மாவட்ட பொருளாளர் வி.குமரன், வேலூர் கிளை இணைச்செயலர் பிரசாந்த் ஆகியோர் புத்தகங்கள் பரிசளித்து பாரட்டுச்சான்று வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள். 

ஊரிசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.எபினேசர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழா நிறைவுரை ஆற்றினார்.  
அறிவியல் விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன் இரண்டுநாள் விழா தொகுப்புரை நிகழ்த்தினார்.  அதில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பதினாறு பேர் உட்பட ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை 139 மாணவர்கள் அறிவியல் கல்வி விழாவில் பங்கேற்றனர் என்றும்,  பெற்றோர்களுக்கு என்று தனியாக நடத்தப்பட்ட சமூக கல்வி பயிற்சியில் 50க்கும் மேற்பட்டவர்கள் 30 00பே0ர்0 கருத்தாளர்கள் 20 தன்னார்வ தொண்டர்கள் இரண்டு நாட்களும் ஆர்வத்துடன் குழந்தைகளோடு குழந்தைகளாக பங்கேற்றது இவ்விழாவின் தனிச்சிறப்பாக அமைந்தது. 
மேலும் சிறப்பாக விடுமுறைக்கு வெளியூர்களிலிருந்து வேலூருக்கு விரு ந்தினர்களாக வந்த மாணவர்கள் உட்பட ஒரு வீட்டிலிருந்து இரண்டு, மூன்று, நான்கு குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக பதினைந்து வீடுகளில் இருந்து குழந்தைகள் பங்கேற்றது வியப்பாக இருந்தது.
முன்னதாக வேலூர் அறிவியல் இயக்க பொருளாளர் ப.சேகர் வரவேற்று பேசினார்.
குழந்தைகள், பெற்றோர், கருத்தாளர்கள் தங்களது அனுபவங்களை உற்சாகத்துடன் விழாவில் பகிர்ந்துகொண்டனர். பெற்றோர்கள் அடுத்து நடக்கும் அறிவியல் விழாவிற்கு தேவையான நிதியுதவி பங்களிப்பதோடு, தொண்டர்களாகவும் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முடிவில் வேலூர் அறிவியல் இயக்க செயற்குழு நிர்வாகி பிராசாந்த் நன்றி கூறினார்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad