வேலூர் ஜூலை 22
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற காயிதே மில்லத் குறைதீர்வு கூட்டத்தில் முன்னாள் இராணுவ படை வீரர் விருத்தாச்சலம் தியாகராஜன் என்பவரின் இடம் பிரச்சனை காரணமாக முன்னாள் இராணுவ வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் குறைதீர்வு நாள் கூட்டரங்கில் வேலூர் மாவட்ட முன்னாள் இராணுவ படை வீரர்கள் இணைந்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
புகார் மனுவில் கூறியதாவது கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சார்ந்த முன்னாள் இராணுவ படை வீரர். தியாகராஜன் என்பவர் 2019ல் அவரது இட பிரச்சனை காரணமாக பக்கத்தில் உள்ள ஆளும் கட்சி நபர் தியாகராஜன் ராணுவ வீரரின் இடத்தை
ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை மனுக்கள் தந்தும் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த முன்னாள் படை இராணுவ வீரர்கள் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் இராணுவ படை வீரர் தியாகராஜனின் கோரிக்கையை நிறைவேற்ற புகார் மனு அளித்துள்ளனர்.
முன்னாள் இராணுவ படை வீரர் தியாகராஜன் பல புகார்கள் அளித்தும் காவல்துறையில் நடவடிக்கை எடுக்காததும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் பேரதிர்ச்சி, அராஜகத்தில் ஈடுபட்டு ஆக்கிரமித்த ஆளும் கட்சி நபரால் இராணுவ வீரர் தியாகராஜன் என்பவருக்கு பல்வேறு அச்சுறுத்தல், மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால், இராணுவ வீரர் தியாகராஜன் குடும்பத்தோடு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் இவர் என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கோரிக்கை மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என வேலூர் மாவட்ட முன்னாள் இராணுவ படை வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமென அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment