குடியாத்தம் ஜூலை 9
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் இன்று காலை வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிகழ்ச்சிக்கு விவசாய தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் கே சி பிரேம் குமார் தலைமை தாங்கினார்
நா பரமசிவம் டி. மணியரசன் என் ஜீவானந்தம் சி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
போராட்டத்தை டி ஆனந்தன் துவக்கி வைத்தார்
இதில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை கொடு வேலை கொடுக்காவிட்டால் சட்டப்படி நிவாரணம் கொடு என்று கோஷங்களிட்டனர்
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment