குடியாத்தம் அருகே அண்ணன் தம்பி கொலை செய்து ஏரியில் வீச்சு
குடியாத்தம் செ.20-
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த வடிவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 43)கட்டிட தொழிலாளி இவரது மனைவி வினிதா(வயது 35) இவருடைய மகன்கள் யோகித் (வயது 5) தர்ஷன் (வயது4)யோகராஜன் நண்பர் குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(வயது 43) இருவரும் கட்டிட மேஸ்திரிகளாக வேலை செய்து வந்தனர்
இதனிடையேஞ நேற்று மாலை 6 மணி அளவில் வசந்தகுமார் யோகராஜ் வீட்டுக்கு சென்று உள்ளார் பின்னர் அவர் வினிதாவிடம் குழந்தைகளை அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்
வெகுநேரமாகியும் மூன்று பேரும் வரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த யோகராஜ் இதை குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வசந்தகுமார் செல்போன் என்னை வைத்து எங்கு இருக்கிறார் என்று ஆய்வு செய்தனர் அப்போது செல் போன் சிக்னல் சிங்கல் பாடி பகுதியை காட்டி உள்ளது
இது சம்பந்தமாக ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அப்போது ஏரிக்கரை பகுதியில் யோகித் மற்றும் தர்ஷன் கொலை செய்யப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
இதற்கிடையில் போலீஸ் வருவதை அறிந்த வசந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்
இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பியை கொலை செய்ததாக கூறப்படும் வசந்தகுமாரை தேடி வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment