Re: ஆசிரியர் பணி இடைநீக்கம் ரத்து செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 4500 ஆசிரியர்கள் பங்கேற்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

Re: ஆசிரியர் பணி இடைநீக்கம் ரத்து செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 4500 ஆசிரியர்கள் பங்கேற்பு


On Mon, Sep 23, 2024, 8:13 PM BAKKIA RAJ BAKKIA RAJ BAKIA RAJ <msraj57@gmail.com> wrote:
வேலூர் செப்.23-

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஆசிரியருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி 
நடத்தி அலைபேசி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது . பள்ளிக்கல்வி சார்பில் அதிரடி பணியிட நீக்கம் செய்யப்பட்டது.
ஆசிரியர் பணி இடைநீக்கம் இரத்து செய்ய கோரி இன்று நடைபெற்ற
கருப்பு பட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 4500 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் 4500 ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் நடைபெற்றது. 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ்,  ஆ. ஜோசப் அன்னையா இணை ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜெயக்குமார்  ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.  
காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் செயலுக்காக ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது கண்டித்து  அனைத்து வகை ஆசிரியர்கள்  இன்று 23.09.2024 திங்கட்கிழமை முதல் வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப ப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும்  அனைத்து ஆசிரியர்களும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிகின்றனர்.  மேலும் இதுகுறித்து இன்று திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிடுகிறோம்.  
மாவட்ட இண ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.டி.பாபு, எஸ். ராஜேஷ்கண்ணா, எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.
செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி உள்ளிட்டோர் தலைமையில் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம்  ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4500க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.  பணியிடை நீக்கம் ஆணை இரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம தொடரும் என தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad