கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக அம்புரோஸ் பிச்சை முத்து இன்று பதவி ஏற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 December 2024

கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக அம்புரோஸ் பிச்சை முத்து இன்று பதவி ஏற்பு!

வேலூர் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக அம்புரோஸ் பிச்சை முத்து இன்று பதவி ஏற்பு!

வேலூர்,டிச.9-

வேலூர் மாவட்டம் தொன்போஸ்கோ உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வேலூர் மறை
மாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சை முத்து அவர்களின் ஆயர் திரு நிலைப்
பாட்டின் நிகழ்ச்சி நடைபெற்றது.

அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான ரோம் அலுவலகத்தில் இருந்து திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேரருட்திரு அம்புரோஸ் பிச்சை முத்து அவர்களை வேலூர் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு 7ஆவது ஆயராக கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நியமித்தார். ஆயர் 3 .5 .1966 அன்று செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் என்ற ஊரில் பிறந்தார். ஊரில் தன்னுடைய தொடக்கக்கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி பயின்றார். சென்னை சாந்தோம் இளம் குருத்துவ கல்லூரியில் பயின்று பின்னர் பூந்தமல்லி தூய இருதய குருத்துவ கல்லூரியில் தத்துவ இயல் மற்றும் இறையியல் பயின்றார் . இதைத் தொடர்ந்து 25 .3 .1993 அன்று சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் பேராயர் ஜி.கஷ்மீர் ஞானாதிக்கம் எஸா.ஜே.அவர்களால் குருவாக அர்ச்சிக்கப் பட்டார். அவர் பெல்ஜியத்தில் உள்ள லூவேன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் தத்து வயியல் முதுகலை பட்டமும், ரோமில் உள்ள ஏஞ்சலிக் கத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டமும் பெற்றவர் .பிறகு சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மறை மாவட்டமாக உருவானது. இம் மறை மாவட்ட பங்கு தளங்களில் பங்கு தந்தையாகவும், ஆர்.சி.எம். பள்ளிகளின் கண் காணிப் பாளராகவும், ஆயரின் ஆலோசகர் ஆகவும் முதன்மை குருவாகவும் பணியாற்றினார். பெங்களூருவில் செயல்படும் அகில இந்திய போன்டிபிகல் பணி அமைப்பின் தேசிய இயக்குனராகவும், ரோமில் செயல்படும் உயர் மட்ட  குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். ஆயர் அவர்களுக்கு 9 .12 .2024 திங்கட்கிழமை அதாவது இன்று மாலை 4.30 மணி அளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று  தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஆயரின் அபிஷேக பெருவிழா  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாடகற்குழு தலைமை பொறுப்பாளராக வேலூர் மாவட்ட பரிபாலகர் பேரருட்பணி டாக்டர் I. ஜான் ராபர்ட்  வேலூர் R.C.M பள்ளி மேலாளர் பேரருபணி S.A.S கிளமெண்ட் ரொசாரியோ   ஆலோஸ சராகவும்  புனித தொன் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் பெலவேந்திரம் இயக்குனராகவும் வட்டார முதன்மை குரு வேட்டவலம் அருட்பணி  A.ஆரோக்கியசாமி உதவி பங்கு தந்தை காட்டு கோயில் விருது விளங்கினார் அருட்பணி Y.  சதீஷ் ராஜ் பங்குத்தந்தை மதுராம்பட்டு அருட்பணி P. சுகம் நாயகம் புனித மரியன்னை இல்லம் தாளாளர் அருட் சகோதரி அமலி காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரி செயலாளர் அருட்சகோதரி டாக்டர் A. மேரி ஜோஸ்பின்  ஆண்டோ  இவர்களின் ஏற்பாட்டில் விழாவில் திருத்தந்தை, இந்திய தூதரின் செயலர், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள் ,இருபால் துறவியர்கள், அருட்கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் 6000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  வேலூர் மறை மாவட்டத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மறை மதுரை மாவட்டங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் திருப்பலிக்கு அமரும் இடங்கள் மிகவும் சிறப்பாகவும் பணி குருக்கள் துறவியர்கள் அருள் சகோதரிகள் என தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டது.

 இறுதியில் அன்பின் உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது  காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போக்குவரத்தும் மற்றும் எந்தவித அசம்பாவிதம் நடக்கப் பெறாமல் பாதுகாத்த காவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad