முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க நிர்வாகிகள் வேலூர் மாநகராட்சி புதிய ஆணையருடன் சந்திப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 February 2023

முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க நிர்வாகிகள் வேலூர் மாநகராட்சி புதிய ஆணையருடன் சந்திப்பு.


வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுபேற்றுள்ள ரத்தினசாமி அவர்களை தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சார்பில் சிறை அலுவலர் ஆர்.குணசேகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து பேசினர். 

மேலும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்த குமார் அவர்களையும் நேரில் சந்தித்து மனு அளித்து பேசினோம். பின்னர் அவரிடம் சிறையிலிருந்து விடுதலையான சிறைவாசிகளின் மேம்பாட்டிக்றகாக மட்டுமே மேற்படி கட்டிடத்திலிருந்து வசூலிக்கப்படும் வாடகையானது தொண்டு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  எனவே தமிழ்நாடு அரசின் உள்த்துறை முதன்மைச்செயலாளர் கடிதம், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த விலக்கு வழங்கப்பட்ட கடிதம், நகரமைப்பு உதவி ஆணையர் அவர்கள் நகர நிலவரிவிலக்கு அளித்துள்ள ஆணையின் படியும், மாநகராட்சி விதிகள் 123பி-படியும் சொத்து வரி விதிப்புகளுக்கு விலக்கு வழங்கிட கோரியும் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் அவர்களின் ஆணையினை இரத்து செய்திட கோரியும் மேல்முறையீட்டு மனுவை வழங்கி பேசினோம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.  

மேலும் தங்கள் பகுதிகளில் மரகன்றுகள் வைத்து பாதுகாக்க மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மரக்கன்றுகளை வழங்கினார்.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad