வேலூர் பதிவு மாவட்ட சார்பதிவாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 February 2023

வேலூர் பதிவு மாவட்ட சார்பதிவாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


ஏழை எளி மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் அரசாணை எண் 80ன்படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் பதிவு மாவட்ட சார்பதிவாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த பதிவாளர் ஜி.சுகுனா தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகி ஜி.செந்தில்குமார் மாவட்ட தலைவர் ஆர்.பழனி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, ஆ.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 


ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அ.சேகர், செய்தித்தொடர்பாளர் வாரா  ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 


சார் பதிவாளர்கள் எஸ்.உமாபதி, கிருஷ்மூர்த்தி ஆர்,பழனி, கே.பு.கவிதா, பா.ஷீலா, எஸ்.ராதிகா, சசிகுமார் சார் பதிவக ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.


கோரிக்கைகள் 

  1. ரியல் எஸ்அட்ட் சட்டத்தின் படி புரோமோட்டர் அல்லா ஏழை எளி மக்கள் மனைகளாக பதிவதில உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
  2. அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவ்வாக்கியும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
  3. தமிழக அரசின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரான மூனறாவது மொழி தேர்வினை ரத்து செய் வேண்டும்.
  4. அசாணை எண் 80ன்படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும்.
  5. பதிவுத்துறையில் ஏற்எகெனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்ய வேண்டும்.  அரசு நிறுவனங்களான நிக், எல்காட் ஆகிய நிறுவனங்கள் மூலம் கணினி மயமாக்கப்பட வேண்டும்.
  6. பொதுக் கலந்தாய்வின் மூலமாக பணியிட மாறுதல்கள் செய்ய வேண்டும்.
  7. உரிய காலத்தில் முறையாக பணி மூப்பு பட்டியல் வெளிட்டு பதவி உயர்கவிகனை வழங்கட வேண்டும்.
  8. பதிவு சட்டப்பிரிவு 86ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
  9. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய ஒப்படைப்பு அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
  10. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.


- வேலூர் தலைமை செய்தியாளர் மு.பாக்கியராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad