வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 February 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி குடியாத்தம் வட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை துறை துணை இயக்குனர் சிவப்பிரகாசம் பொதுப்பணித்துறை நீர்வள பணி ஆய்வாளர் சிவகுமார் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் குடியாத்தம் வட்ட வழங்கல் துறை ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் பங்கேற்றனர் .


பாக்கம் கிராமத்தில் உள்ள சமூக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கிராமத்தில் மூன்று செங்கல் சூளை உள்ளது இந்த சூலைக்கு தீ வைப்பதால் அப்பகுதியில் மாசு கட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார். மேல்முட்டுகூர் கிராமத்தில் உள்ள ஏரியல் மதகு திறந்த விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றும் பல கோரிக்கைகள் வைத்தனர் .


நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்தனர் இக்கூட்டத்தில் குடியாத்தம் பேரணாம்பட்டு சார்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad