வேலூர் மாவட்டம் குடியாத்தம் 32 வது வட்டம் செருவங்கி பகுதியில் சீனியர் பெண்களுக்கான கபடி போட்டி தேர்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் 32வது வட்ட திமுக கிளைச் செயலாளர்E. தயாளன் போட்டியை துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கபடி வீரர்கள் இரா .பாஸ்கர் செ.கு. வெங்கடேசன் கபடி கழக பொருளாளர் அம்மன் ரவி, கபடி கழகதுணைத் தலைவர் பாரதிதாசன், கபடி கழக இணை செயலாளர் ஆறுமுக தாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக கோபாலன் துளசி பணியாற்றினார்கள். இந்த போட்டியை எவரெஸ்ட் கபடி கழகம் மற்றும் வேலூர் மாவட்டஅமைச்சூர் கபடி கழகம் ஏற்பாடு செய்திருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment