இவருக்கு கடந்த 12.12.22. அன்று காட்பாடி நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபட்டது, இதனால் சுரேஷ. தானாக முன்வந்து காட்பாடி நீதித்துறை நடுவர் அவர்களிடம் வழக்கறிஞர் மூலமாக சரணடைந்து ரீ கால் செய்து கொண்டார்.

இதனால் இனி நீதிமன்றத்திற்கு தவறாமல் ஆஜராவேன் என உறுதிமொழி அளித்தார், இதன் அடிப்படையில் என் மீது பிறப்பிக்கப்பட்ட NBW ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சுரேஷ் நான் என்னுடைய அனைத்து வழக்குகளிலும் தவறாமல் நீதிமன்றம் வந்து எனது வழக்கறிஞர் மூலமாக நடத்துகிறேன். நான் மனம் திருந்தி என் மனைவி மற்றும் மகன் என் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என்றும் இதன் அடிப்படையில் என் மனுவை வேலூர் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசீலித்து என் மீது பொய் வழக்குகள் போடாமல் நான் திருந்தி வாழ ஆணை செய்யும்படி கேட்டு மனு கொடுத்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment