வேலூர் மாவட்டம் ஆற்காடு ரோடு ஐடா‌ ஸ்கடர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 14 March 2023

வேலூர் மாவட்டம் ஆற்காடு ரோடு ஐடா‌ ஸ்கடர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதி.


வேலூர் மாநகரத்தின் முக்கியமான சாலையில் ஒன்றான ஆற்காடு ரோடு  ஐடா ஸ்கடர் சாலை  வழியாக சி.எம்.சி மருத்துவமனை பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் நோயாளிகள் தினந்தோறும் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள்.

அது மட்டும் இன்றி அரசு  அலுவலகங்கள்,தனியார் நிறுவனங்கள் வேலைக்கு செல்வார்கள்,பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள்,கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலர் செல்பவர்கள் இந்த சாலை வழியாகவே கடந்து செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டப்பட்டுள்ள சாலைகள் மேடும் பள்ளமாக உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓட்டிகளுக்கு  இந்த சாலையில் பயணிப்பது சிரமமாக உள்ளது அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பாக சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் சென்று கொண்டிருந்த டூ வீலர் வாகன ஓட்டி ஒருவர் காகிதப்பட்டறை பேருந்து நிலையம் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் தடுமாறி எதிரில் வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .


சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பலர் கரடு முரடான சாலையில் வாகனம் ஓட்டும்போது தடுமாறி கீழே விழுந்து பலர் விபத்தில் உள்ள ஆளாகி உள்ளனர்* இந்தச் செய்திகள் பல நாளிதழ்களில் வெளியே வந்துள்ளது ஆகையால் இனிவரும் காலங்களில் இது போன்று விபத்துகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சித் தலைவர்.அவர்கள் உடனடியாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து  சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முதல் சைதாப்பேட்டை முருகர் கோவில் வரை தார் சாலை அமைத்து வேண்டும் என்று நேற்று வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு காகிதப்பட்டறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் கோரிக்கை மனு ஒன்றினை வேலூர் மாவட்ட ஆட்சித் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்களிடம் விடுதலை கட்சி சி.சி.விமல் குமார்மாவட்ட துணை அமைப்பாளர் சார்பில் மனு வழங்கப்பட்டது.


- வேலூர் தாலுகா செய்தியாளர்  மு. இன்பராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad