வேலூர் புறநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (14.3.23) காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார், குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் J.K.N.பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சேட்டு கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், சந்திரா சேட்டு, காடை மூர்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளர்கள் V.ராமு, T.சிவா, D.பிரபாகரன், G.லோகநாதன்Ex MLA, K.M.I.சீனிவாசன், ஆனந்தன், பாபுஜி ராகவன், மணிமாறன், நாகராஜ், உமாபதி, கோவிந்தராஜ், ஜோதி குமார், G.பரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment