உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சார்பில் மாரத்தான் ஓட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 March 2023

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சார்பில் மாரத்தான் ஓட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஜூனியர் சேம்பர் இன்டர் நேஷனல் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை  மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.  


இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர்க்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது இதில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பட்ட மாணவ மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஜி. வினோத் காந்தி மேனேஜிங் டைரக்டர் ஜி கே வேர்ல்ட் ஸ்கூல் நல்லசாமி தொழிலதிபர் பிரதீப் இன்ஜினியரிங் என்டர்பிரைசஸ் மேனேஜிங் டைரக்டர் கே சுஜாதா வினோத் ராணிப்பேட்டை மாநகராட்சி சேர்மன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 


ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ரத்தினகுமாரி ப்ரெசிடெண்ட் மற்றும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், 150 க்கும் மேற்பட்ட மகளிர்க்கு முதல் பரிசு கேடயம் மெடல் சான்றிதழ் வழங்கப்பட்டது இது போன்று முதலில் வந்த ஆறு நபருக்கு வழங்கப்பட்டது.


இதேபோன்று மகளிர் தினத்தை மட்டுமல்லாமல் அனைத்து சமூக விழிப்புணர்களிலும் மற்றும் உலக சுற்றுப்புற சூழல்  விழிப்புணர்வுளிலும் எடுத்துக்காட்டாக மகளிர்கள் திகழ வேண்டும் என்று விழாவில் பேசி நன்றி உரை முடிக்கப்பட்டது.


- வாலாஜா செய்தியாளர் நிகால் அஹமத் 

No comments:

Post a Comment

Post Top Ad