உலக பெண்கள் தினவிழா சிறந்த பெண்மணி விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கினார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 March 2023

உலக பெண்கள் தினவிழா சிறந்த பெண்மணி விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கினார்.


தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு காட்பாடி வட்ட ரெட்கிராஸ்கிளையின் சார்பில் பி.எம்.டி.ஜெயின் பள்ளியில் நடைபெற்ற உலக பெண்கள் தினவிழா சிறந்த பெண்மணி விருதுகளை வேலூர் துணை ஆட்சியர்  ஆர்.கே.கவிதா வழங்கினார்.

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையும் வேலூர் ஹரிஹந்த் நகர் பி.எம்.டி.ஜெயின் பள்ளியும் இணைந்து உலக பெண்கள் தின விழா ஜெயின் பள்ளி வளாகத்தில் 08.03.2023 புதன் கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  


இவ்விழாவில் சிறந்த பெண்மணி விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கி கௌரவித்தார். விழாவிற்கு காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் எம்.மாலதி வரவேற்று பேசினர்.  

ஜெயின் கல்விக்குழும அறங்காவலர் ருக்ஜி கே.ரஜேஸ்குமார்ஜெயின் ரெட்கிராஸ் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, அவைதுணைத்தலைவர்கள் ஆர்.விஜயகுமாரி, இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆறுமுகம், ஆயுள் உறுப்பினர்கள் ஆனந்த், வி.காந்திலால்படேல், கலைவாணி, பெண் சாதனையாளர் விருது வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரி உதவி பேராசிரியை காயத்ரி, பள்ளி முதல்வர் எம்.மாலதி, கல்வி ஆலோசகர் ஆர்.கீதா, ஆர்.விஜயகுமாரி, எம்.கலைவாணி,  குமரன் நர்சிங் கல்லூரி முதல்வர் ஆர்.மீனாகுமாரி ஆகியோருக்கு சிறந்த பெண்மணிக்கான விருதுகளை வேலூர் துணை ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா  வழங்கி சிறப்புரையாற்றினார். 


அப்போது அவர் கூறியதாவது  இன்றைய மகளிர் தினத்தில் சிறந்த பெண்மணி விருது பெறும் அனைவரையும் பாராட்டுகிறேன்.  மேலும் ஒவ்வொரு மகளிரும் துடிப்புடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் அனைவரும் புரிதலும் நடந்து நாட்டினை வளமாக்க வேண்டும்.  பெண்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து செயலாற்றிட வேண்டுமென கூறினார்.


குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் பெண்களா ஆண்களா என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவராக கே.கோமதி தலைமையில் ஆசிரியைகள் கே.சிந்து, எஸ்.மாலதி, டி.சுமதி, எஸ்.ரஞ்சிதா, எஸ்.கிருஷ்ணலட்சுமி, டி.எஸ்.சங்கரி ஆகியோர் பேசினர், முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் டி.சிவரஞ்சனி நன்றி கூறினார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad