இவ்விழாவிற்கு வேலூர் மாநகராட்சியின் 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீடா.சரவணன் பங்கேற்று கல்வியாண்டில் சிறந்த சேவை புரிந்தமைக்காக சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றுப் பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் சச்சிதானந்தம், அவை துணைத் தலைவர்கள் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனிவாசன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் டி.வேணுகோபால், ஶ்ரீரஞ்சனி, தலைமை ஆசிரியர் பழனி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலாண்மை குழு உறுப்பினர்கள் கண் மருத்துவர் டாக்டர் தீனபந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், ஆர்.லட்சுமிநாராயணன், மோகன், ராஜி, பாஸ்கர், சேட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் வரவேற்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் முடிவில் நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஶ்ரீரஞ்சனி நன்றி கூறினார்.
- வேலுர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்
No comments:
Post a Comment