வேலூர் மாவட்டம் அடுத்த குடியாத்தம் கடந்த 2019 ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா நிவாரண பொருட்கள் மாதம் 100 பேருக்கு தொடர்ந்து 69 மாதங்களாக நிவாரண பொருட்களை நடுப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் தமிழக குரல் குடியாத்தம் தாலுகா செய்தியாளர். கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ஆதிதிராவிடர் நலத்துறை ஆலோசனை குழு உறுப்பினருமான எஸ்எஸ் ரமேஷ் குமார் சிறப்பாக அழைப்பாளர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் விதைகள் திருநங்கைகள் பார்வையற்றோருக்கு வழங்கினார்.
எஸ் டி மோகன்ராஜ் நவீன் மகாலிங்கம் சமூக சேவை கங்காதேவி பங்கேற்றனர் நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு சேமியா மஞ்சள் தூள் பள்ளி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் என 100 பேருக்கு வழங்கப்பட்டது. முடிவில் குடியாத்தம் குமரன் நன்றி கூறினார்.
- மாவட்ட செய்தியாளர் மு. பாக்கியராஜ்.
No comments:
Post a Comment