கோல்டன் ரோட்டரி கேலக்ஸி சார்பாக பொதுமக்கள் வசதியாக மிகக் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 April 2023

கோல்டன் ரோட்டரி கேலக்ஸி சார்பாக பொதுமக்கள் வசதியாக மிகக் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கப்பட்டது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கோல்டன் ரோட்டரி கேலக்ஸி சார்பாக பொதுமக்கள் வசதியாக மிகக் குறைந்த கட்டணத்தில் சுமார்  10- லட்சம்  மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கப்பட்டது.

மாவட்ட ரோட்டரி ஆளுநர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமல விஜயன் கொடி அசைத்து இயக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி கோல்டன் ரோட்டரி கேலக்ஸி அறக்கட்டளை தலைவர் கோபிநாத் ரோட்டரி சங்கத் தலைவர் மேகராஜ் கோல்டன் ரோட்டரி கேலக்ஸி தலைவர் குமரவேல் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி குமரன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் குமரகுரு மருத்துவ அலுவலர் மாறன் பாபு இன்னர் வீல் சங்கத் தலைவி கீதாஞ்சலி நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad