அரசு குழந்தைகள் இல்லத்தில் ஈஸ்டர் பண்டிகை விழா; காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் போர்வைகள், குவளை வழங்கினார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 April 2023

அரசு குழந்தைகள் இல்லத்தில் ஈஸ்டர் பண்டிகை விழா; காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் போர்வைகள், குவளை வழங்கினார்.


காட்பாடி செங்குட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையினை முன்னிட்டு போர்வைகள் மற்றும் தண்ணீர் எடுக்க பயன்படும் குவளை போன்ற பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. 

தமிழகஅரசின் சமூக பாதுகாப்புத்துறையின் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ், தன்னார்வ தொண்டர்கள் எ.ஜெ.சாம்ராஜ், எ.ஜவகர் சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து காப்பக மாணவிகளுகளுடன்  ஈஸ்டர் பண்டிகை விழா, காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. 

செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்று பேசினார். ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், கே.ஜான்சன்வசந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  வேலூர் கூட்டுறவு சங்கி கள அலுவலர் எ.வெங்கடேசன், மற்றும் எ.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


காப்பக மாணவிகளுக்கு போர்வைகள், தண்ணீர் எடுக்க பயன்படும் குவளை போன்ற பொருட்களை காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வழங்கினார். முன்னதாக அரசு குழந்தைகள் இல்லத்தின் காப்பகத்தின் கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, வரவேற்றார்.  முடிவில் இல்ல காப்பாளர் விஜயா நன்றி கூறினார். 

 

- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ். 

No comments:

Post a Comment

Post Top Ad