ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த ஒருவரின் குடியிருப்பில் அம்பேத்கர் படம் வரைவதற்கு எதிர்ப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 April 2023

ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த ஒருவரின் குடியிருப்பில் அம்பேத்கர் படம் வரைவதற்கு எதிர்ப்பு.


ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த ஒருவரின் குடியிருப்பில் சட்ட மாமேதை  அம்பேத்கர் படம் வரைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரிகளையும் காவல்துறையினரையும் விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கின்றோம் என அக்கட்சியினர் கூறினர்.

வேலூர் விருப்பாச்சிபுரம் தேசிய மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் சொந்த குடியிருப்பில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் படம் வரைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினரும் அராஜகப் போக்கில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சொந்த குடியிருப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் படம் வரைய எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரிகளையும் காவல்துறையிடம் கண்டிக்கின்ற வகையில் நாளை காலை: 9-மணி அளவில் விருப்பாச்சிபுரம் தேசிய மெட்ரிகுலேஷன் ஸ்கூல் அருகில் வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி ஒன்றியம், மாவட்டத் துணைநிலை அமைப்பு, மகளிர் விடுதலை இயக்கம், பேரூராட்சி, முகாம் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என அக்கட்சி பொறுப்பாளர்கள் கூறினர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad