வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக சார்பில் மே தின விழா கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பீடி தீப்பெட்டி தொழிற்சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேழகன், கே வி குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் நகர செயலாளர் ஜேகேஎன்.பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்எஸ்.ரமேஷ் குமார், ஒன்றிய செயலாளர் வி.இராமு டி.சிவா, முன்னாள் நகரமன்ற தலைவர் அமுதாசிவப்பிரகாசம், நகர மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ராஜா, குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மம்தா இமயகிரி, பாபு நகர இணை செயலாளர் அமுதா கருணா அக்பர் ஷெரிப், நடிகர் வெங்கடேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment