தலைமை நிர்வாகிகள் கூட்டமும், செயற்குழு கூட்டமும் அகில இந்திய பொதுக்குழு கூட்டமும் திருவனந்தபுரம் மாநகரில் கேரள மாநில ஆசிரியர் சங்க வளாகத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் கே.சி.அரிகிஷ்ணன் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, ஆண்டறிக்கை சமர்பித்து பேசினார். பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, நிதிநிலை அறிக்கை சமர்பித்து பேசினார். இணை பொதுச்செயலாளர் சுகுமார் பெய்ன், தேசிய துணைத்தலைவர் ச.மயில், தேசிய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அ.மாயவன்,ExMLC செ.நா.ஜனார்த்தனன், எஸ்.பிரபாகரன், பி.பேட்ரிக்ரெய்மன்ட், சிவஶ்ரீரமேஷ், டி.உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.மணிமேகலை, ஜெ.மத்தேயு, ட்டி.ஜான்கிருஸ்துராஜ், ஆகியோர் உள்பட பல்வேறு மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் பேசினர்.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- கல்வித்துறையில் நாம் கடினமான காலத்தையும் பல சவால்களையும் எதிர்கொண்டுள்ளோம். கோவிட் தொற்றுநோயின் முக்கியமான காலகட்டத்தில் மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கை-2020ஐ நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத உறவின் நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை வணிகமயமாக்கல், மற்றும் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும். இது கோடிக்கணக்கான மாணவர்களின் இலவச, கட்டாய, அறிவியல் மற்றும் தரமான கல்வியைப் பறிக்கும். எனவே, புதிய கல்வி திட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோருகிறது. கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனையுடன் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
- புதிய பங்கேற்பு மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தினை (NPS) ரத்து செய்வது மற்றும் வரையறுக்கப்பட்ட நன்மைகளுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது.
- தற்காலிக அல்லது ஒப்பந்த ஆசிரியர்களின் பணிகளை முறைப்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம், சேவைப் பாதுகாப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் ஆகியவை கோரிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலூர் மாவட்ட செய்தியாளர்
மு.பாக்கியராஜ்
No comments:
Post a Comment