வைகாசி 1ம் தேதி இன்று (15.5.2023) திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசுபெருவிழா இன்று காலை தொடங்குகிறது. தரனம்பேட்டை முத்தியாலம்மன் திருக்கோயிலில் இருந்து அம்மன் சிரசு தலை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது சுமார் 2கிலோ மீட்டர் தூரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று கவுண்டன்யமாக நதி கரையில் அமைந்துள்ள சிரசு மண்டபத்தில் பொருத்தப்படுகிறது.
இன்று மாலை 8 மணி அளவில் சிரசு மண்டபத்தில் இருந்து அம்மன் சிரசு அகற்றப்படுகிறது மாவட்ட நிர்வாகம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தப்பட்டுள்ளது காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் சுமார் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 2 எஸ்பிக்கள் 5 ஏடிஎஸ்பிக்கள் 13 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்ப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் சிறப்பு காவல் படையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உளவு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி நெரிசலில் சிக்காதவாறு அம்மனை தரிசனம் செய்ய இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இன்று ஒருநாள் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்கள் வெளியூர்களில் இருந்து கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது சிரசு திருவிழாவை காண அதிகாலை முதலே பக்தர்கள் அலைமோதுவார்கள் சுமார் 5 மணி நேரம் நடக்கும் இந்த சிரசு பெருவிழாவில் பக்தர்கள் வழிநெடுகளும் மாலைகள் அணிவித்தும் ஆடு கோழிகளை பலியிட்டும் சூறைதேங்காய்களை உடைத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை உற்சாகமாக வரவேற்று வீதி வீதியாக தரனம்பேட்டை பஜார் காந்தி ரோடு நடுப்பேட்டை ஜவஹர்லால் தெரு கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அம்மன் சிரசு மண்டபத்தை அடைகிறது வழிநெடிலும் முதலுதவி சிகிச்சை அளிக்க வகையில் மருத்துவதுறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மின்சார துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினர் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் கோயில் அருகாமையிலும் குடியாத்தம் நகர் பகுதிகளில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களதுபணிகளை மேற்கொண்டு வருகின்றனர் குடியாத்தம் நகராட்சி சார்பில் ஆங்காங்கே ராட்சதடேங்க் மூலமாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது இன்று இரவு 8 மணி அளவில் வேலூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ள ஆற்றங்கரையில் வான வேடிக்கை மிக சிறப்பாக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வண்ண வண்ண வேடிக்கைகள் வானத்தில் நிகழ்த்துவார்கள் இதில் அனைத்து பக்தர்களும் ஆற்றங்கரையில் மற்றும் சாலைகளின் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய போக்குவரத்து போலீசார் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
மேலும் குடியாத்தம் நகர்களுக்குள் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் நகர எல்லைக்குள் நுழையாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் இன்று நாள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது ஆங்காங்கே பக்தர்கள் அன்னதானம் நீர் மோர் பந்தல் மற்றும் தங்களால் முடிந்த அனைத்து வகையான உதவிகளையும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு செய்து வருகின்றனர் பக்தர்கள் இன்று சிரசு பெருவிழாவை காண வேலூர்மாவட்ட நிர்வாகம் இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment