வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேர்ணாம்பட்டு அடுத்த ஏரி குத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பருக்சையத் (வயது 29) வந்துள்ளார்.
குடியாத்தம் அடுத்த ஜிட்டபள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பு அணையில் இன்று காலை 11:30 மணி அளவில் குளிக்க சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக அணையில் முழுங்கி உள்ளார். இதனை அறிந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment