இதற்கான விழா காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 14.06.2023 பிற்பகல் 4.00 மணியளவில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் வி.பழனி வரவேற்று பேசினார். வேலூர் மாநகராட்சியின் துனைமேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி அதிக மாணவர்களை இரத்த தானம் செய்ய ஊக்குவித்த நிறுவனம் என்ற விருதும், காட்பாடி எல்.தேவ்ராஜ் ஜெயின், 49முறை இரத்த தானம் செய்த எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், 26முறை இரத்த தானம் செய்த ஜெ.குமரவேல் 19 முறை இரத்த தானம் செய்த வி.புவனேஸ்வரி, பி.டிம்பில், ஆர்.தேவி, ரமேஷ், ஜெ.மோனிகா, டி.அபிஷேக், டி.ஹரிஷ், டி.ஆஷிஸ், கே.பிரகாஷ், ஆகியோருக்கு சிறந்த இரத்த தானம் செய்தோர் விருதுகளை வழங்கி வேலூர் உதவி ஆட்சியர் மற்றும் ரெட்கிராஸ் தலைவர் ஆர்.கே.கவிதா பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது, உலகக் குருதிக் கொடையாளர் தினம் உலகம் முழுவதும் ஜூன் 14-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தொடர்ந்து இரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது என்றார் மேலும் அவர் கூறுகையில் எல்லா வற்றிகும் விலை நிர்ணயிக்கலாம் ஆனால் இரத்த தானம் செய்வதற்கு விலை நிர்ணயிக்க முடியாது பலரது உயிர் காப்பதற்கு இரத்த தானம் அவசியம், மேலும் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது எனது சகோதரியின் மற்றும் எனது மகன் உயிரை காப்பாற்றவும் உங்களை போன்ற இரத்த கொடையாளர்கள் தான் காப்பாற்றினர் சரியான நேரத்தில் செய்த குருதி கொடைய பல உயிற்களை காப்பாற்றுகிறது. பாராட்டுக்கள் நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம் குருதி கொடையாளர்களை பாராட்டும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்திற்கும் பாராட்டுக்கள் என்றார்.
மருத்துவக்குழு தலைவர் மருத்துவர் வீ.தீனபந்து, துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ஆயுள் உறுப்பினர்கள் செல்வமணி, லயன்.பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment