அப்பொழுது கடந்த கல்வி ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது இதற்காக மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .மேலும் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக உழைத்த தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
அடுத்த கல்வி ஆண்டில் இதைவிட கூடுதலான தேர்ச்சி விளிகாட்டினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி சார்பில் கல்வி வளர்ச்சிக்காக உரிய உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.


நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கோ சரளா தலைமை தாங்கினார். முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா. ஜனார்த்தனன் வரவேற்று பேசினார், வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா மகேந்திரன் சித்ரா லோகநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜே கே தாமஸ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டிடக்குழு உறுப்பினர் லோகநாதன் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் பதினோராயிரம் வழங்கி பாராட்டினார் .பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் திருநாவுக்கரசு வாழ்த்தி பேசினார் .உதவி தலைமை ஆசிரியர்கள் எம் மாரிமுத்து கே திருமொழி பி ரோசலின் பொன்னி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment