வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மகன் கோகுல் (25) திருமணமாகி கௌதமி என்ற மனைவி உள்ளார் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் இவர் இன்று (22.6.2023) மாலை 4-மணியளவில் ஏரி அருகே உள்ள அம்மன் கோயில் அருகில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோகுல் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


No comments:
Post a Comment