அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய வரை கைது செய்ய கோரிக்கை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 22 June 2023

அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய வரை கைது செய்ய கோரிக்கை.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடியார்  அவர்களையும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் அவர்களையும் தரைக்குறைவாக பேசிய குடியாத்தம் குமரன் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் SRK அப்பு தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் K.பாலச்சந்தர் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்று புகார் அளிக்கப்பட்டது .


இந்த நிகழ்வில் அதிமுகவின் மாவட்ட இணை செயலாளர் தாஸ் பகுதி செயலாளர்கள் S.குப்புசாமி, S.நாகு (ஏ) நாகராஜன், M.A.ஜெய்சங்கர், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் DDR.ரகு, மாநகராட்சி மாமன்ற அதிமுக குழு எதிர்க்கட்சித் தலைவர் எழிலரசன்,  மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட மாணவரணி  இணை செயலாளர் எழிலரசன், சிவகுமார், ரஃபிக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad