வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் வாகன ஓட்டுனராக கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் ஜான் என்பவர் இன்று வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் வாகன ஓட்டுனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.


இதற்காக இன்று தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் தலைமையில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வாசுகி தமிழ் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் வட்ட வழங்கல் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment