நிகழ்ச்சிக்கு தற்போதைய தலைவர் ஏ மேகராஜ் தலைமை ஏற்று நடத்தினா் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் Rtn ஜே கே என் பழனி, கௌரவ விருந்தினராக 2023 - 2024 ஆண்டிற்கான மாவட்ட ஆளுநர் Rtn பரணிதரன், வேலூர் சிறப்பு அழைப்பாளராக Rtn சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு Rtn E வாசுதேவன் 2023 -2024 ஆண்டிற்கான தலைவராகவும், Rtn G கணேஷ் செயலாளராகவும், Rtn T S ரவிச்சந்திரன் பொருளாளராகவும் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.


பத்தாம் வகுப்பு பிளஸ் டூ வகுப்புகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது, ஆனந்த குழந்தைகள் மையத்திற்கும் ஞானவாய வள்ளலார் கோட்டம் மற்றும் ஓம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளைக்கும் அரிசி மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது Rtn கே எம் ஜி ராஜேந்திரன் Rtm கே எம் பூபதி Rtn சம்பத்குமார் மாவட்ட செயலாளர் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் 250 மேல் பட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பெண்மணிகள் குழந்தைகள் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் இதில் ரோட்டரி சங்க செயலாளர் ஜி கணேசன் நன்றி கூறினார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment