லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் 121 வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 July 2023

லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் 121 வது பிறந்த நாள் விழா.


குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 121 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், பள்ளியின் தாளாளர்  சடகோபன், மாணவர்களுக்கு காமராசரின் வரலாறும் , அரசாட்சி அறத்தையும், கல்வி நலத் திட்டங்களும், அவரின் கொள்கைகளையும் பற்றி அனைவருக்கும் எளிமையாக எடுத்துக்கூறி தலைமையுரை ஆற்றினார். 


பள்ளியின் செயலாளர் இரம்யா கண்ணன் SPL & ASPL மாணவர்களின் கடமைகளையும் பொறுப்புகளை கூறி, காமராசர் பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 

 

பள்ளியின் முதல்வர் மேகலா வரவேற்புரை ஆற்ற பள்ளியின் துணைமுதல்வர்கள் ராஜகுமாரி மற்றும் ராஜ்குமார் விழாவினை ஒருங்கிணைத்தனர். பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் பொருட்டு தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்ற SPL & ASPL மாணவர்களுக்கு பதவி பிரமானம் செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவர், செயலாளர்களை தேர்ந்தெடுத்தனார். இறுதியாக, பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியர் விந்தோஷ் குமார், நன்றியுரை கூறி விழா இனிதே நிறைவுற்றது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad