இன்று மாலை சுமார் 5:30 மணி அளவில் சுதா என்பவர் மர்மமான முறையில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார் தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் சுதா குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சுதா ஏற்கனவே இறந்துவிட்டார் .என்ற தகவலை தெரிவித்தனர் தற்போது சுதாவின் பிரேதம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதா மணிகண்டன் தம்பதியருக்கு 12 02 2023 அன்று திருமண நடந்துள்ளது. இவர் வன்னியர் இனத்தைச் சார்ந்தவர்கள் மணிகண்டன் பெங்களூரில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்துள்ளார்.
இவரது குடும்பம் பெங்களூரிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ள நிலையில் தனது தகப்பனார் விநாயகம் என்பவருக்கு உடல்நிலைகுறைவின் காரணமாக மருத்துவம் பார்ப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன் காளியம்மன் பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து உள்ளார், என்பது விசாரணை தெரிய வருகிறது. இது தொடர்பாக குடியாத்தம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment