ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி அவர்கள் இன்று காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கணினி உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் வினாடி வினா நடைபெறுவதை ஆய்வு செய்தார். மாணவிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பணியில் இருந்த ஆசிரியர்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உரிய காலத்திற்குள் அனைத்து மாணவிகளும் நிகழ்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றார்.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சு.தயாளன் , முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயசங்கர், பள்ளித்துணை ஆய்வாளர் மணிவாசகன் பள்ளியின் தலைமையாசிரியர் கோ.சரளா, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், முதுகலை ஆசிரியர் எஸ்.வெங்கடேசன், இடைநிலை உதவித்தலைமையாசிரியை ரோசலின்பொன்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
10.07.2023 முதல் அனைத்து உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகள் நடைபெறுகிறது. வட்டார அளவில் பயிற்சி பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் போதிக்கும் அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் இப்பயிற்சியை முடிக்க வேண்டும். உயர் தொல்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசப் பள்ளிகளில் நடத்த வேண்டும்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.

No comments:
Post a Comment