வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி பேருந்து நிலையத்தில் சோதனையின் போது பிடிபட்ட மது பாட்டில்கள் பறிமுதல்.
காட்பாடி திருவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அரும்பருத்தி பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வீட்டில் வைத்திருந்ததாக விஜயா க/பெ பழனி அரும்பருத்தி என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 180 ML அளவுகொண்ட 83 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment