வேலூர் மாவட்டம் அடுத்த தேன் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியில் மரம் வளர்க்கும் போட்டி நடைபெற்றது. மரம் வளர்ப்போம் போட்டியில் கலந்து கொண்டு ஒரு வருட முடிவில் நல்ல நிலைமையில் மரக்கன்றுகளை வளர்த்த மூன்று மாணவிகளுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்கள் ஏழ்மை நிலையிலும் மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ள இவர்களுக்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல் மேலும் ஊக்குவிக்கும் வண்ணமாக வாழ்த்து தெரிவித்தார் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந் நற்செயலுக்கு உறுதுணையாக இருந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர்
மு .இன்பராஜ்

No comments:
Post a Comment