குடியாத்தம் தலைமை மருத்துவமனை கட்டுமான பணி துவங்கிய நிலையில் மருத்துவ மனை அருகில் அமைந்துள்ள நகரமன்ற அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், இரண்டையும் வேறு இடத்தில் மாற்றம் செய்து அந்த இரு இடங்களையும் மருத்துவமனை விரிவாக்கம் செய்து மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து செயல்படுத்திட வேண்டுமென மாவட்டஆட்சியரிடம் இந்திய கமயூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.லதா.மு.ச.ம.உ. மனு கொடுத்து பேசப்பட்டது.


மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இது குறித்து சம்மந்தப்படட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அரசின் கவணத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.லதா மு. ச. ம. உ. அவர்களுடன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் எல்.மணி மாவட்ட துணைசெயலாளர் துரைசெல்வம் மாவட்ட பொருளாளர் எஸ்.காவேரி மற்றும் முக்கிய தோழர்கள் உடனிருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
.jpg)
No comments:
Post a Comment