வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம் வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரமேஷ் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சதீஷ் வேளாண்மை துறை அலுவலர் நித்யா தோட்டக்கலை அலுவலர் தமிழரசி வருவாய் ஆய்வாளர்கள் பலராமன் பாஸ்கர் மஞ்சுநாதன் வட்ட வழங்க ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் மற்றும் பல அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் குடியாத்தம் உழவர் சந்தையில் காய்கனிகள் குப்பைகளை அகற்ற வேண்டும் உழவர் சந்தை வெளிப்பகுதியில் கேமராக்கள் அமைக்க வேண்டும் கதிர்குளம் பகுதியில் நிலம் அளவீடு செய்ய வேண்டும் போஜனபுரம் சரக்குப்பம் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பாதைகளை அளவீடு செய்ய வேண்டும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணம் நூறு விபத்து நிவாரணம் 11 லட்சத்து 21 ஆயிரம் திருமண உதவித்தொகை 50,000 கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்ற கோரிக்கைகள் சம்பந்தமாக விவாத நடைபெற்றது மேலும் மாதாந்திர விவசாய குறைத்து நாள் கூட்டத்தில் மிகக் குறைந்த அளவில் 12 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment