வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் இன்று கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேலூர் தெற்கு பகுதி செயலாளர் எம் சுனில் குமார் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் வேலூர் மாநகர வேலூர் மாவட்ட செயலாளர் பா .கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் தி. அ.முகமது சகி, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், துரை, சிங்காரம், ஒன்றிய மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:
Post a Comment