வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மஞ்சள், சந்தனம், பன்னீர் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கெங்கை அம்மன் திருக்கோயில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்து சென்றனர் இதை நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்.
விழாவில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர் ஆட்டோ பி.மோகன், தாமோதரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment