இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 4000 கி.மீ வாகனப்பிரச்சாரம்; இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 July 2023

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 4000 கி.மீ வாகனப்பிரச்சாரம்; இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு.


பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம், கிராம வங்கிகளை பாதுகாப்போம், கூட்டுறவு வங்கிகளை பாதுகாப்போம் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாகன பிரச்சாரம் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (BEFI யின்) 11வது அகில இந்திய மாநாடு ஆகஸ்ட் மாதம் 12, 13 & 14ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த அகில இந்திய மாநாட்டின் நிகழ்வாக தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரம் 4000 கிலோமீட்டர் தூரம் தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து திருச்சியை நோக்கி ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது.   இந்த பிரச்சார இயக்கத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்றது.

காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் ஹரிராவ் தலைமை தாங்கினார்.  வேலூர் மண்டல தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தார்.  இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றம் தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.சீனிவாசன், நிர்வாகிகள் வாரா, ஆர்.எஸ்.அஜீஸ்குமார், கே.தனசேகரன், கே.சங்கர், கனரா வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன், கௌரவ தலைவர் சரவணன்  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மாவதவமூர்த்தி, முத்து, பார்த்திபன், சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.


இந்த பிரச்சாரத்தின் முக்கியமான நோக்கம் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை அளிக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்  தமிழ்நாடு மாநிலக் குழு இந்த முடிவை எடுத்து செயல்படுத்துகிறது. இந்த பிரச்சார வாகனம் வேலூருக்கு இன்று வருகை தந்தது  மாலை 4.30 மணிக்கு காட்பாடி  சித்தூர் பேருந்து நிலையம், மாலை 5.30 மண்டி வீதி , 6.30 மணிக்கு சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை  பகுதியிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.


சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் ஹரிராவ் கூறுகையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப் போகிறோம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  அதே வேளையில் சாமான்ய மக்களுக்கு சேவை புரியும் கூட்டுறவு வங்கிகளை தனியார் மயமாக்கவும், அவற்றை மாநில அரசுகளிடமிருந்து பறித்து மத்திய அரசு எடுத்துக்கொள்ளவுமான முய்ற்சி நடைபெற்று வருகிறது.  கிராம வங்கிகள் மொத்தக் கடனில் 90 சதவீத கடனை கிராமப்பு ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றன.  அந்த வங்கிகளின் 49 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான முய்ற்சி நடைபெறுகிறது.  


எஸ்.எம்எஸ் கட்டணம், ஏடிஎம் கட்டணம், பாஸ்புக் கட்டணம், குறைந்த பட்ச இருப்பு கட்டணம் என்று பலவகையில் வாடிக்க்கையாளர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அபாராதம் வசூலிக்கப்டுகிறது.  மறுபுறம் பெரு முதலாளிகளின் வாராக்கடன் இரத்து செய்யப்படுகிறது வாடிக்கைகயாளர் சேவையை மேம்படுத்தவும் அவர்களிடமிருந்து அநியாய அபேராதக் கட்டண வசூலை கைவிடவும் வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது என்றார்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad