வேலூர் மாவட்டம் காட்பாடி வி. ஐ. டி பல்கலைகழகத்தின் சார்பில் 14 ஆம் ஆண்டாக கிராவிடரஸ்- 23 அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 150 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு வி.ஐ. டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
அப்பொழுது அவர் அறிவித்தவுடன் கீழே இருந்த ரோபோ கிராவிடாஸ்-23 லோகோவை அறிமுகம் செய்து இசைத்தட்டை ஒலித்தது. இதனைப் பார்த்த மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி. வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கர் விசுவநாதன், ஜி. வி. செல்வம், சிறப்பு விருந்தினர் அனுஜ்பல்லா, கவுரவ விருந்தினர் பாராஸ் பரிக் உள்பட அனைவரும் பார்வையிட்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment